கீர்த்தி சுரேஷ் குந்தவையாக நடித்திருந்தால் இப்படித்தான் இருப்பார்வைரலாகும் புகைப்படம்.!

kundavai
kundavai

மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் வெளியாக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி,  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களுடன் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அது மட்டும் அல்லாமல் வசூலி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாம தமிழகத்தில் மட்டும் 160 கோடிக்கு மேல் வசூல் செய்து இரண்டாவது இடத்தில் நிலைத்து நிற்கிறது.

விரைவில் முதலிடத்தில் இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் வசூலை பொன்னின் செல்வன் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் இல்லாமல் உலக அளவில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்.

கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தி, ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக நடித்து மிரட்டி உள்ளார். இந்த திரைப்படத்தில் குந்தவையாக நடிகை திரிஷா நடித்து தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.

ஆனால் ரஜினி நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நிராகரித்துள்ளார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால் அவரின் கதாபாத்திரமும் தோற்றமும் இப்படித்தான் இருக்கும் என ஒரு புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

keerthy suresh
keerthy suresh