படப்பிடிப்பில் கமல் இப்படித்தான் நடந்து கொள்வார்.! உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை..

kamal
kamal

சிவாஜியை தொடர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் உலக நாயகன் கமலஹாசன்.  மற்ற நடிகர்களை விட இவர் நடிக்கும் படங்கள் வித்தியாசமாக இருக்கும் அதே சமயம் இவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்படும் அதனால் இவரது படத்தை பார்க்கவே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருகின்றன.

உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லோகேஷ் உடன் கைகோர்த்து விக்ரம் என்னும் படத்தில் நடித்தார் இந்த படம் வெளிவந்து பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மற்றும் பிராக்கெட் கே படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை முடித்துவிட்டு ஹச். வினோதத்துடன் படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் அடுத்த மூன்று வருடத்திற்கு கமல் பிஸியான ஒரு நபராக இருப்பார் என கூறப்படுகிறது இப்படி படங்களில் வெற்றி நடிகராக ஓடும் கமல் அவ்வபோது கிசுகிசுகளும் சிக்குவது உண்டு. ஆனால் இதற்கு கமல் பெரிதாக பதில் அளித்ததே கிடையாது.

இந்த நிலையில் கமலுடன் நடித்த பிரபல நடிகை அமலா உலக நாயகன் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார் 1988 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சத்யா”. இந்த படத்தில் அமலா ஹீரோயின்னாக நடித்திருப்பார். இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை வெளிப்படையாக கூறியுள்ள அமலா.. படப்பிடிப்பு நடக்கும் போது கமல் தன் கதாபாத்திரத்திற்கு மட்டுமல்லாமல் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அதிக ஈடுபாடை கொண்டிருப்பார்.

அவர் ஒரு சினிமா கலையின் பல்கலைக்கழகம் என்றும் கூறினார். மேலும் பேசிய அமலா எனக்கு குளோசப் ஷாட்கள் எடுக்கும் போது அவர் சொல்லாமல் கேமரா பின்னால் அமர்ந்து முகபாவனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை செய்து காட்டுவார் நான் ஃபிலிம் இன்ஸ்டியூட் போனதில்லை ஆனால் அவர் தான் எனக்கு சினிமாவின் யுனிவர்சிட்டி எனக் கூறியுள்ளார்.