ஆர்யா, ஜெய், நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த திரைப்படம் ராஜா ராணி இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. இப்படத்தை தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வருகிறது. அந்தவகையில் மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த பெங்களூர் டேஸ் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இவரின் அழகினாலும் சிறந்த நடிப்புத் திறமையினாலும் குறுகிய காலத்திலேயே சினிமாவில் பிரபலமடைந்தார். இவ்வாறு பல திரைப்படங்கள் அடுத்தடுத்து நடித்து வந்த இவர் திடீரென்று திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நஸ்ரியா மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என்று அனைவருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் நஸ்ரியாவை விட பகத் பாசில் அதிக வயது உடையவர். கிட்டத்தட்ட இவர்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வயது வித்தியாசம் இருக்கும். அதோடு நஸ்ரியாவின் ரசிகர்களும் பகத் பாசில் மீது கோபத்தில் இருந்து வந்தார்கள்.
இது ஒருபுறமிருக்க தொடர்ந்து இவர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். பகத் பாசில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பின்னி எடுத்திருப்பார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் மாலிக் திரைப்படம் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் அறிக்கையை ஒட்டி மீண்டும் ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது முதல் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது வரை அனைத்தைப் பற்றியும் கூறியுள்ளார்.
அதில் பெங்களூரு டேஸ்ட் திரைப்படத்திலிருந்து தான் நஸ்ரியாவுடன் என் பயணம் தொடங்கியது. நான் ஒரு மோதிரத்தையும் ஒரு கடிதத்தையும் எடுத்துக்கொண்டு போய் நஸ்ரியாவிடம் தந்தேன் அதற்கு நான் சரியா ஓகே என்றும் சொல்லவில்லை நோ என்றும் சொல்லவில்லை. நஸ்ரியாவின் விடாமுயற்சியால் எங்கள் காதல் திருமணம் என்றெல்லாம் கூறி உள்ளார்.