90 களில் இருந்து இன்று வரையிலும் காமெடியனாகவும், ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர் வைகை புயல் வடிவேலு. இப்படிப்பட்ட வடிவேலு தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நான்கு வருடங்கள் சினிமா பக்கமே தென்படாமல் இருந்தார். ஒரு வழியாக லைகா நிறுவனம் அந்த பிரச்சனையிலிருந்து வடிவேலை மீட்டெடுத்தது இதனை அடுத்து தமிழ் சினிமாவில் தற்பொழுது பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வெளிவந்து மோசமான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக தோற்றது.
இதிலிருந்து மீண்டு வர மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்னன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது இதனைத் தொடர்ந்து ஒரு சில முக்கிய நடிகர்கள் படங்களிலும் வடிவேலு நடித்து வருகிறார். இப்பொழுது வடிவேலுக்கு பட வாய்ப்புக்கு பஞ்சமில்லை என்றாலும் ஆரம்பத்தில் பட வாய்ப்பு கைப்பற்ற ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார்.
ஆம் ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்த பொழுது கவுண்டமணிக்கும் இவருக்கும் இடையே பல பிரச்சனைகள் எல்லாம் இருந்ததாகவும் அப்பொழுது கவுண்டமணி எது சொன்னாலும் அதை பொறுமையாக காதில் வாங்கிக் கொண்டு போவார் இப்படித்தான் படிப்படியாக வடிவேலும் முன்னேறினார் என பலர் கூறுவார்கள் இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளரான செய்யார் பாலு வடிவேலு பற்றி பேசியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்கிரண் ஒரு திருமண வரவேற்பதற்காக மதுரைக்கு சென்று இருந்தாராம் அப்பொழுது அந்த திருமண விழாவில் அது சம்பந்தமான சில உறவினர்கள் வர மாலையில் வரவேற்பு என்ற காரணத்தினால் காலையிலேயே வந்த ராஜ்கிரனை ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்க வைக்கலாமா என யோசித்தார்களாம் ஆனால் ராஜ்கிரண் வேண்டாம் இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி இருக்கிறார்.
ஆகவே ராஜ்கிரனுக்கு பேச்சுத் துணையாக ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்களாம். ஒல்லியான உடம்புடன் கருகரு நிறத்துடன் அந்த நபர் காணப்பட்டார். ராஜ்கிரண் இது என்னடா வம்பா போச்சு என முதலில் யோசித்து இருக்கிறார் அதன் பிறகு அந்த நபரே பேச ஆரம்பித்தாராம். அதாவது தனக்கு பாட்டு பாட தெரியும் சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது என கூறி தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.
மேலும் நான் சாவுக்கு எல்லாம் ஆடி இருக்கிறேன் எனக்கூறி அது சம்பந்தமான பாடல்களை பாடியும் காட்டினாராம். இது ராஜ்கிரனுக்கு மிகவும் பிடித்துப் போகவே சரி வா உன்னை நான் அழைத்துக் கொண்டு போகிறேன் என்று கூறி என் ராசாவின் மனசினிலே படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வர சொல்லி உள்ளாராம் அதன் பிறகு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் இப்படித்தான் நகைச்சுவை நடிகராக வைகை புயல் உருவெடுத்தார் என கூறினார்.