தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்கள் தூக்கி கொண்டாடும் ஒரு நடிகர்தான் விஜய் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பது மட்டுமில்லாமல் இவர் அமைதியான குணம் கொண்டவர் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தளபதி விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு முறை தன்னுடைய கெத்து நிரூபிப்பதற்காக ரசிகர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்து இருந்தது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாகியது மட்டுமில்லாமல் தளபதி விஜய்யை இதன் மூலம் பலரும் கேலி செய்து வந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சில தினங்களுக்கு முன்பாக பிரபல நடிகர்களுக்கு பாதுகாவலனாக செல்லும் பாடிகாட் சிலர் கொடுத்த பேட்டி தான் காரணம்.
அந்தவகையில் பாடிகார்ட் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களை பற்றி பேசி இருந்தார்கள் அப்போது மிகப்பெரிய நடிகர் ஒருவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்பொழுது அவரைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர்களை பார்த்தவுடன் அருகில் இருந்த ஒருவரிடம் சொல்கிறார் இப்போ பாரு என்னுடைய கெத்தை
என்று கூறி ரசிகர்களின் அருகில் சென்றவுடன் ரசிகர்கள் ஓடோடி அவருடன் புகைப்படம் எடுக்க கூட்டம் கூடிவிட்டார்கள் இதன் காரணமாக அங்கு கூட்டம் கூடிய பின்னர் உடனே அங்கிருந்து அந்த நடிகரை காப்பாற்றி கேரவனுக்கு அழைத்து சென்று விட்டோம்.
100% Bouncer solraathu Vijay ah thaan @trolee_ @scbjagadish @prsekar05#Annaatthe #Valimai pic.twitter.com/l9dLmrW7JI
— Nirmal (@nirmal_kumar6) December 2, 2021
இவ்வாறு நடந்து கொண்டது தளபதி விஜய் என்று அந்த பாதுகாவலர் குறிப்பிட்டு சொல்லவில்லை ஆனால் இதுபோன்ற சம்பவம் தளபதி விஜயின் திரைப்பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனால் பலர் இது விஜய் தான் என சமூக வலைதள பக்கத்தில் இந்த விஷயத்தை வைரலாகி வருகிறார்கள்.
Video la Bouncer Bala number ku fan oruthar msg panirukaru.
He replied "Its not vijay sir. I like him very much"#ProblemEnded #Clarification
Let's focus on Beast Single.
Chat credits : @VJ_Vinod_ #ThalapathyVijay #Beast pic.twitter.com/EW1CH5J2in
— santhosh (@SanthoshNanban) December 2, 2021