சினிமாவுலகம் நேரத்திற்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டே செல்கிறது அதற்கேற்றார்போல இயக்குனர்களும், நடிகர்களும் தன்னை அப்டேட் செய்து கொண்டு சிறப்பாக பயணிக்கின்றனர். அதிலும் சமீபகாலமாக புதுமுக இயக்குனர்கள் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து. வருவதால் அவர்கள் வெகு விரைவிலேயே உச்சத்தை தொடுவதோடு டாப் நடிகரின் படங்களையும் கைப்பற்றி விடுகின்றனர்.
அந்த வகையில் சிறந்த படைப்புகளை கொடுத்து சினிமா பிரபலங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியவர் ஹச். வினோத். இவர் தற்போது அஜித்தை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை எடுக்க ரெடியாக இருக்கிறார். நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படத்தை தற்போது எடுத்து முடித்து உள்ளார்.
வலிமை படம் ஒரு வருடங்களுக்கு மேலாக எடுத்து வந்த படக்குழு எந்த ஒரு அப்டேட்டையும் தெரிவிக்காமல் ரசிகர்களை காயப் போட்டது. ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அடைந்து இருப்பார்கள் அதுவும் செய்யதால் அஜித் ரசிகர்கள் புலம்ப அரம்பித்தனர். இதை அறிந்த வலிமை படத்தில் நடித்த ஒரு சில பிரபலங்கள் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தினர்.
அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தொடங்கி பல பிரபலங்கள் இந்த படத்தை பற்றி சிறு தகவல் சொல்லி வந்தனர். இப்படி இருக்க வலிமை படத்தில் நடித்த சங்கீதா என்ற நடிகை இந்த படம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியது : வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை திரைப்படம் சூப்பராக வந்து உள்ளது. இந்த படத்தில் அஜீத் இதுவரை நடித்திராத கேரக்டரில் நடித்துள்ளார். வலிமை படத்தில் அஜித்தை நீங்கள் புதிய மாதிரியாக பார்க்க போகிறீர்கள் 10 வருடங்களுக்கு முன் அஜித் எப்படி இருந்தாரோ அது போன்ற ஒரு தோற்றத்தில் தான் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஒவ்வொரு சீனையும் இயக்குனர் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் இந்த படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என கூறினார் இச்செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் தற்போது வேகம் எடுத்துள்ளது.