விஜய் டிவியில் ஜிபி முத்துக்கு பிடித்த பிரபலம் இவர்தான்.! அட இவர எல்லாருக்குமே பிடிக்குமே…

gp-muthu
gp-muthu

பொதுவாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் விஜய் டிவியின் பிரபலங்கள் விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று விடுகிறார்கள் இருந்தாலும் ஒரு சில நபர்கள் மட்டுமே எல்லா நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்வார்கள் இப்படிப்பட்ட நிலையில் இது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார்.

அதாவது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியை தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான போட்டியாளர்கள் பங்குபெற்று இருக்கிறார்கள். மேலும் யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து.

இவருடைய டிக் டாக் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்டது மேலும் இவருடைய பேச்சு மற்றும் பாவனை ஆகியவை அனைவரையும் கவர்ந்தது இப்படிப்பட்ட நிலையில் ஜிபி முத்துவிடம் சக போட்டியாளர்களான மகாலட்சுமி விஜய் டிவியில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என கேட்கிறார். அதற்கு ஜிபி முத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் மாகாபா அண்ணனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என கூறினார்.

மேலும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க என வெளிப்படையாக கூறியுள்ளார் ஜிபி முத்து. விஜய் டிவியில் உள்ள பல நட்சத்திரங்கள் மாகாபா தனக்கு உதவி செய்திருப்பதாக கூறியுள்ளார்கள் மேலும் திறமையான ஒருவருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் மாகாபா. மேலும் இவர் பல வருடங்களாக விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அதிலும் முக்கியமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தற்பொழுது விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சின்னத்திரையில் தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இரண்டு, மூன்று திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் ஆனால் எந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக வெற்றியை தரவில்லை இதன் காரணமாக மாகாபாத் தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.