சமந்தா அணிந்திருப்பதிலேயே இதுதான் எப்பொழுதும் ரொம்ப காஸ்ட்லி.! அதுக்குன்னு இத்தனை லட்சமா.? வாயை பிளக்கும் ரசிகர்கள்

samantha-67
samantha-67

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று சாகுந்தலம் திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. அந்த வகையில் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்பொழுது சமந்தா சிட்டாடல் என்ற வெப் சீரியலில் நடித்து வரும் நிலையில் சமந்தா அணிந்திருப்பதிலேயே ரொம்பவும் காஸ்ட்லியான பொருள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் தற்பொழுது பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கும் நிலையில் பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார். இதன் காரணமாக தற்பொழுது வெப் சீரியலில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அதற்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் மேலும் அதே அளவிற்கு இதில் கவர்ச்சியும் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். திருமணத்திற்கு பிறகு பிஸியாக இருந்து வந்த நிலையில் திடீரென மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருடைய நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று வெளியான நிலையில் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.

அப்படி நெகட்டிவ் விமர்சனங்களுடன் தோல்வியை சந்தித்த நிலையில்  80கோடி ரூபாயில் உருவான சாகுந்தலம் திரைப்படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிஸியாக இருந்து வரும் சமந்தா வெக்கேஷன்காக வெளிநாடு சென்றுள்ளார். அதற்காக நேற்று ஹைதராபாத் விமான நிலையம் சென்றிருந்த சமந்தாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

அதில் சமந்தா வெள்ளை நிற பேண்ட், கருப்பு மேலாடை அணிந்திருந்தார் மேலும் இடிப்பில் ஹூடி ஜாக்கெட்டை கட்டிக்கொண்டு செம ஸ்டைலாக சென்றிருந்தார். மேலும் இதனை எடுத்து லூயிஸ் உய்ட்டன் பிராண்ட் ஸ்லைடு மாடல் செருப்புகளை அணித்திருந்தார். இது பலருடைய கவனத்தையும் ஈர்த்தது அந்த செருப்பின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த செருப்பின் விலை சுமார் 2500 டாலர்கள் என சொல்லப்படுகிறது அப்படி இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.