நடிகர் அஜித் தனது 60 வது திரைப்படமான வலிமை திரைப்படத்தில் நடித முடித்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்தது ஆனால் இப்பொழுது நிலவும் சூழல் சரியில்லாத காரணத்தினால் படத்தை வேறு தேதியில் வெளியிடலாம் என கூறி உள்ளது.
ஆனால் அடுத்த தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் ரெடியாக இருக்கிறார் அஜித். வலிமை படம் பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக வெளிவரும் என படக்குழுவும், ரசிகர்களும் நம்பியிருக்கின்றனர்.
படம் வருவது வரட்டும் தனது 61 – வது திரைப் படத்தில் நடிக்கலாம் என அஜீத் முடிவெடுத்துள்ளாராம். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படத்தில் பணியாற்றிய அதே குழுவுடன் மீண்டும் ஒருமுறை இணைய இருக்கிறார். மீண்டும் ஒருமுறை இயக்குனர் ஹச். வினோத்துடனும், தயாரிப்பாளர் போனிகபூர் உடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
AK 61 படத்தின் பூஜையை வெகுவிரைவிலேயே போட்டுவிட்டு படத்தின் ஷூட்டிங்கை நடத்த படக்குழுவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த படத்தில் அஜித் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே ஹச். வினோத் சொல்லி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது மும்பையில் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார் அஜித் அப்போது அவரது அலுவலகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இந்த கெட்டப்பில் இருக்கும் அஜித் தான் AK 61 படத்தில் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். புகைப்படம் மற்றும் இச்செய்தியை இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.