அதிரடியாக வெளியானது அஜித்தின் அடுத்த கட்ட “பிளான்”.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.. என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்

ajith
ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் அஜித்குமார். இவர் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால் என்னவோ இவரது படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி விடுகிறது கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபாரி படமாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக 260 கோடிக்கு மேல் அள்ளியுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62  வது திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை  மகிழ் திருமேனி இயக்க உள்ளாராம்.. வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கும் என தெரிய வருகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் சினிமாவையும் தாண்டி தனக்கென ஒரு கனவு வைத்திருக்கிறார்.

அது என்னவென்றால் தனக்கு பிடித்த வேலைகளை அல்லது விருப்பங்களை செய்ய வேண்டும் என்பதுதான் அதன்படி சமைப்பது, துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த இவர் சமீப காலமாக பைக் ரைடு மூலம் உலகைச் சுற்றிவர முடிவு செய்தார் அதன்படி முதல் பகுதி வெற்றிக்கர்மாக முடிந்தை தொடர்ந்து இரண்டாவதாக பைக் ரைடு மூலம் உலகைச் சுற்ற திட்டமிட்டு இருக்கிறார்.

அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்னவென்றால்.. திரு. அஜித்குமார் மோட்டார் சைக்கிளின் மூலம் இரண்டாவது உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக லைகா நிறுவனத்துடன் ஒரு படம் பண்ணுகிறார் அதை முடித்துவிட்டு தான்.. இரண்டாவது உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறி இருக்கிறார்.