அதிதி ஷங்கருக்கு ரொம்ப பிடித்த பாடல் இதுதானாம் – ஒரு நாளைக்கு மட்டுமே 100 முறை கேட்பாராம்.! அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்.

aditi-

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தக்க வைத்து இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை எடுத்திருந்தாலும் அந்தப் படங்கள் ஒவ்வொன்றும் இன்றும் பேசப்படும் படமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் நண்பன், எந்திரன், சிவாஜி, இந்தியன், ஐ என சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது சங்கர் தமிழை தாண்டி தெலுங்கிலும் நடிகர் ராம் சரணை வைத்து RC 15 என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் நுழைந்துள்ளார். நடிகை அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் சம்மதத்துடன் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் விரும்பன்.  இந்த படத்தில் அதிதி ஷங்கர் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகின்ற நிலையில் அதிதி சங்கரின் நடிப்பை பற்றி பலரும் நல்ல கமெண்ட்களை கூறி வருகின்றனர்.

மேலும் அதிதி முதல் படத்தில் நடிப்பது போலவே தெரியவில்லை அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் விருமன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல ஊடகத்தில் பேட்டி கொடுத்த போது தொகுப்பாளர் ஒருவர் அதிதியிடம் நீங்கள் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் எது என கேட்டுள்ளனர். அதற்கு அதிதி தற்பொழுது கஞ்சா பூ கண்ணால பாடல் எனக் கூறினார்.

மேலும் இதற்கு முன் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை அதிகமாக கேட்டுள்ளதாக கூறினார். அதுவும் அரபிக் குத்து பாடலை ஒரு நாளைக்கு 100 முறையாவது கேட்பது எனது வழக்கம் என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.