நடிகர் விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடித்த தொலைக்காட்சி இதுதான் – அதுவும் இந்த நிகழ்ச்சி ரொம்ப ஃபேவரட்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தனது இளம் வயதில் இருந்து தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். மேலும் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. இவரது படங்கள் வெளிவருகிறது என்றால் அதனை ரசிகர்கள் திருவிழா போல் தான் கொண்டாடி தீர்ப்பார்கள்.

அப்படி கடைசியாக விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படமான தளபதி 66 படத்தை இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்த சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒருகட்டத்தில் சிவாங்கி பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் அப்போது விஜயுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை கூட சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்போது விஜய் சிவாங்கி இடம் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து வருகிறேன் என கூறியுள்ளாராம்.

மேலும் கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் விஜயின் நண்பனான சஞ்சீவ் கலந்து கொண்ட போது அவர் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பார் எனவும் கூறி இருந்ததை அடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் பார்க்கிறார் என்பது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.