நடிகர் சூர்யாவுக்கு ரொம்பவும் “பிடித்த உணவு” இதுதான்..! பிரபல சமையல் வல்லுனர் பேட்டி.!

surya
surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.  இவர் சினிமா உலகில் நடிப்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இவருக்கு ரொம்ப பிடித்தது நடிப்பது தான். சூர்யா சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் தான் அதனால் தற்போது சந்தோஷமாக அடுத்து வரும் புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிறுத்தை சிவா உடன் ஒரு படம்.

பண்ண இருக்கிறார் அதற்கான பூஜை கூட போடப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து வெற்றிமாறனுடன் ஒரு படம் சுதா கொங்கரா உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார் இதனால் சூர்யாவின் மார்க்கெட் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூர்யாவுக்கு எந்த மாதிரியான உணவு பிடிக்கும் என்பதை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சமையல் வல்லுனராகவும், நடிகராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்பொழுது இவர் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பிடித்த உணவு என்ன என்பது குறித்து பேசினார்.

அவர் சொன்னது இயக்குனர் சங்கர் ஒவ்வொரு சாப்பாட்டையும் ரொம்ப ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவார் என கூறினார்.. மேலும் பேசிய அவர் ராமதாஸ் அவர்களுக்கு கம்பு சாதம் ரொம்பவும் பிடிக்கும் என்றார் அதேபோல நடிகர் சூர்யாவுக்கு கோதுமை பரோட்டா என்றால் ரொம்ப பிரியம் சும்மா ருசிச்சு சாப்பிடுவார் என வெளிப்படையாக அப்பொழுது கூறினார். இந்த செய்தியை நடிகர் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.