தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் நானே வருவேன். இந்த திரைப்படத்தின் காலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நானே வருவேன்.
இந்த படத்தில் கொடி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீட்ன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள.
இந்த படத்தினை வி கிரியேஷன் தயாரிப்பில் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரித்து இருக்கிறார் மேலும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பூவன் சீனிவாசன் அவர்களின் படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது. கடைசியாக சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றபலம் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதாவது நானே வருவேன் படத்தின் காலை நான்கு மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.