தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் பல படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்க படம்தான் எனக் கூறப்படுகிறது.
அப்படி அம்மா சென்டிமென்ட் மற்றும் ஒரு பட்டதாரி இளைஞரின் நிலை என்னவாக இருக்கும் என்று அழகாக எடுத்து வைத்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் 50 ஆயிரம் சம்பளமாக தரும் கால் சென்டர் வேலைக்கு போக மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒரு விஐபி கதை தான் இந்த வேலையில்ல பட்டதாரி.
இந்த திரைப்படத்தில் தனுசுக்கு அம்மாவாக நடித்தவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் பல திரைப்படங்களில் முன்னணி குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் விஐபி படத்தின் ஷூட்டிங் நேரத்தில் தனுஷிடம் வந்து இதெல்லாம் ஒரு படமா இதில் நடிக்க என்னை வேற கூப்பிட்டு இருக்கீங்க என தனுசை தீண்டினாராம். அதற்கு தனுஷ் பொறுத்து நீங்க படம் முடிஞ்சதுக்கு அப்புறம் பாருங்க எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று என சாமர்த்தியமாக கூறியிருக்கிறாராம்.
எனக்கு இதுல ஒரு சீனும் இல்லை இதுல என்ன வீட்டுக்கு வந்து வேற கதையை சொல்லி ஓவர் பில்டப் கொடுத்த என சரண்யா பொன்வண்ணன் மேலும் தனுஷிடம் கூறியிருக்கிறாராம். அதன் பிறகு படம் முடிந்து டப்பிங் செய்யும் போது அந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்த்த சரண்யா பொன்வண்ணன் வியந்து போய் இருக்கிறார் இதை நடிகை சரண்யா பொன்வன்ன்ணன் ஒரு பேட்டியிலும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.