கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வந்த விக்ரம் திரைப் படத்திற்கு உலகளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் நேற்று வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான கமெண்ட்டுகளையைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில் விஜய் சேதுபதி போன்ற இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் மட்டும் நடித்து வருகின்றனர் என்ற தகவல் அண்மைகாலமாக வெளிவந்த நிலையில் படத்தின் டிரெய்லரில் ஒரு முக்கிய ஹீரோவை விக்ரம் படக்குழு ஒளித்து வைத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் சூர்யாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ளார். அந்த செய்தி படத்தின் டிரைலர் வெளிவரும்போது தான் தெரிய வந்துள்ளது. மேலும் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது சூர்யா ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருந்த நிலையில் விக்ரம் படமும் சூரியா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. ஏனெனில் விக்ரம் படத்தில் சூர்யா வரும் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம் பெற்றிருந்தாலும் அந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் வகையில் இருந்தது.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது அதில் நீண்ட தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த 20 நிமிட காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிரட்டும் வகையில் இருந்தது மேலும் இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.