தமிழ் திரையுலகில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் இந்த திரைப்படத்தினை நயன்தாராவின் ஆசை காதலன் விக்னேஷ் சிவன் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்த அதுமட்டுமில்லாமல் இரண்டு கதாநாயகிகள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றார்கள் அதில் நடித்தது யார் யார் என்றால் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தான்.
இவ்வாறு இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற ஒரே காரணத்தினால் இந்த திரைப்படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்து அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய நடிப்பு திறமையும் தரமாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. அதாவது இந்த காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தாராம்.
அதேபோல நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தாவுக்கு பதிலாக முதன்முதலாக திரிஷா தான் தேர்வாகி இருந்தாராம் பின்னர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதன் காரணமாகத்தான் விஜய் சேதுபதி இதில் நடிக்க நேரிட்டது.
கண்டிப்பாக முதலில் நடிக்க இருந்த ஜோடிகள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் மாபெரும் வெற்றி கண்டிருக்கும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
எது எப்படியோ விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்திற்கு செலவு செய்த பணத்தை விட அதிகமாகவே சம்பாதித்துக் காட்டியுள்ளார் தனது ஆசை காதலிக்காக.