உலக நாயகன் கமலஹாசன் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் எந்த மாதிரியான காட்சி கொடுத்தாலும் சரி அதற்காக முழு அர்ப்பணிப்போடு நடிக்க கூடியவர். காதல் மன்னனாகவும் ஆக்சன் ஹீரோவாகவும் என எப்படி கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் கமலுக்கு ஈடு இணை எவரும் இல்லை. அதனால்தான் ரசிகர்கள் இவரை செல்லமாக உலக நாயகன் கமலஹாசன் என அழைக்கப்படுகிறார்.
சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் அரசியல் பிரவேசம் மற்றும் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டார். இருப்பினும் சினிமாவில் இவர் படைத்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதால் சினிமா இவரை விடாமல் துரத்தியது. அப்படித்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுக்காக பார்த்து பார்த்து செதுக்கிய கதைதான் விக்ரம்.
இந்த படத்தின் கதையை கமலை நேரில் சந்தித்து கூற கமல்ஹாசனுக்கு ரொம்ப பிடித்து போகவே துணிச்சலாக இந்த படத்தில் நடித்தார். மேலும் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ருத்ர தாண்டவம் ஆடியது விக்ரம் திரைப்படம் சுமார் 410 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமலும் ஆர்வத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். முதலாவதாக இந்தியன் 2 அடுத்ததாக தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களை முடிக்க ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கமலுக்கு அடுத்து இன்னொரு கமல் என்றால் அது சிம்பு தான் என கூறிய அதிரவைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன் அவர் சொல்லி உள்ளது. கமலஹாசன் சென்டிமென்ட் படங்கள் காதல் ஆக்சன் என எல்லா மாதிரியான படங்களிலும் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர்.
அதேபோல இருப்பவர் தான் சிம்பு கமலுக்கு அடுத்து இன்னொரு கமல் என்றால் அது சிம்பு தான் என கூறியுள்ளார். சிம்பு ஆக்சன் படங்களிலும் நடிப்பார் காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களிலும் பின்னி பெடலெடுக்க கூடியவர். அப்படி நிறைய படங்கள் நாம் பார்த்து உள்ளோம் நிச்சயமாக கமலுக்கு அடுத்து இன்னொரு கமல் சிம்பு தான் என அடித்து அவர் பேசி உள்ளார் இச்செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது