சினிமா உலகில் சிறந்த படைப்புகளை கொடுத்து இயக்குனர்கள் உலக அளவில் பிரபலம் அடைகின்றனர். அந்த இயக்குனருக்கு ஒரு கட்டத்தில் தனது சொந்த மொழியையும் தாண்டி மற்ற மொழிகளும், தனக்கு பிடித்த நடிகர்களை வைத்து படம் பண்ணவும் ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் யாஷ் அவர்களை வைத்து கேஜிஎப் என்னும் மாபெரும் ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருந்தாலும் அதே சமயம் செண்டிமெண்ட் சீன்களும் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது இழுத்தது. மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது குறிப்பாக வசூலில் நல்ல வேட்டையாடியது. முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த பாகமும் உடனடியாக எடுக்கப்பட்டது.
இருப்பினும் ஷூட்டிங்கின்போது பல்வேறு தடைகள் வந்ததால் முடிக்க நீண்ட காலம் அவகாசம் எடுத்து மேலும் வெளிவரவும் படாத பாடுபட்டது ஒருவழியாக கேஜிஎப் 2 வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இதுவரை இந்த படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்கள் அனைத்தும் மிரட்டலாக இருந்துள்ளதால் படமும்..
வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் போஸ்ட் புரமோஷன்னுக்காக பல்வேறு பேட்டி கொடுத்து வருகிறார் KGF பட இயக்குனர். அப்படி ஒரு பேட்டி ஒன்றில் இயக்குனர் பிரசாந்த் நீல் தமிழில் யாரை வைத்து ஆசைப்படுகின்றனர் கேட்டுள்ளனர் ஆதரித்து தளபதி விஜயை வைத்து படம் பண்ண ஆசை எனக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தால் தளபதி ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படி சிறப்பான ஒரு படத்தை கொடுப்பேன் என கூறியுள்ளார்.
நடிகர் விஜய்க்கும் கேஜிஎப் போன்ற ஒரு சிறப்பான படத்தில் நடிக்க ஆசைப்பட்டு உள்ளார் இதனால் இவர்கள் இருவரும் இணைந்தால் நிச்சயம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படம் உருவாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை சமீபத்தில்கூட விஜய் இயக்குனர் பிரஷாந்த் நீல் அவர்களை சந்தித்து உளவாக செய்தி ஒன்று உலா வருகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.