நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பரான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்துகிறார் இதனால் அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. அதேசமயம் அந்தப் படங்களில் நடிகர் தனுஷின் நடிப்பு சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் விருதுகளையும் அள்ளி வருகிறது.
அந்த வகையில் தனுஷின் படங்களான வடசென்னை, பொல்லாதவன், கர்ணன், ஆடுகளம், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக மாறின மேலும் அந்த படங்கள் தான் அவருக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்து குறிப்பாக தேசிய விருதை அள்ளிக்கொடுத்து உள்ளதால் தற்போது அவர் சந்தோஷத்தில் இருக்கிறார் தற்போது நடிகர் தனுஷ் வாத்தி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் இப்படி தொடர்ந்து சிறப்பான படங்களை ஒரு பக்கம் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் தனுஷ் ஹாலிவுட் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் இதனால் அவருக்கான வரவேற்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷின் அப்பா இயக்குனருமான கஸ்தூரிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கவில்லை என்றால் அவர் சினிமாவுலகில் நடிக்க வந்திருக்க மாட்டார் என கூறினார். இவர் இதை விலாவாரியாக சொல்ல துள்ளுவதோ இளமை படத்தின் கதையை எழுதிவிட்டு ஆடிஷன்காக 140 நபர்களை வரச் சொல்லி தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதில் ஒருவராக தெலுங்கு நடிகர் உதய் கிரண் கலந்து கொண்டார் அவரது திறமை சிறப்பாக இருந்த காரணத்தினால் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வைக்க முனைப்பு காட்டினார். அவரும் ஓகே எல்லாம் சொல்லிவிட்டாராம். ஆனால் சில காரணங்களால் கடைசி நேரத்தில் அவர் நடிக்க முடியாமல் போக பின் கஸ்தூரிராஜா சிறிது நேரம் யோசித்துவிட்டு தனது இளைய மகன் தனுஷை படத்தில் நடிக்க வைத்து விடலாம் என முனைப்பு காட்டினார் பின் தனுஷூம் இந்த படத்தில் நடித்த சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடங்கினாராம்.