தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்பொழுது கதாநாயகிகளாக நடித்து கலக்கி வருகிறார்கள் அந்தவகையில் யோகிபாபு, சந்தானம் ஆகிய பலரை எடுத்துக்காட்டாக சொல்லும் வகையில் சமீபத்தில் நடிகர் சூரி கூட காமெடி கதாபாத்திரத்தில் இருந்து கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு மாறி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூரி காமெடி திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தற்போது விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த அமைப்பு ஒன்று சூரி உடைய பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அந்த அறக்கட்டளை மூலமாக மேல்படிப்பு படிக்க விரும்பும் பல்வேறு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியான நடிகர் சூரி என்னுடைய பெயரில் வெளியாகி உள்ள இந்த விளம்பரம் முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று கூறி உள்ளார். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை போலியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் எந்த நோக்கத்துடன் எப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை மேலும் அவர்கள் கூடிய விரைவில் இந்த கயலை நிறுத்தாவிட்டால் உடனடியாக நான் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் சூரி அவர்கள் கூறி உள்ளார் மேலும் என்னால் முடிந்த கல்வி உதவியை நான் செய்து கொண்டேதான் இருப்பேன் ஆனால் அதை இப்படி விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
— Actor Soori (@sooriofficial) June 13, 2022