கே ஜி எஃப், RRR எவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்ததோ.. அதே தாக்கத்தை தமிழ் சினிமாவில் இந்த படம் கொடுக்கும் – சொன்ன எஸ் கலைப்புலி தாணு.!

kgf-
kgf-

நடிகர் சூர்யா எப்பொழுதும் வித்தியாசமான  திரைப்படங்களையும் கொடுக்கக்கூடிய ஒரு நடிகர் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம்  மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தன.

அதனை தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும்  படங்களை கொடுக்க இருக்கிறார்  அந்த வகையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக ஒரு புதிய படம் உருவாகி வருகிறது இந்த படம் மீனவர்களை மையப்படுத்தி சில தகவல்களை எடுத்துரைக்கும் என கூறப்படுகிறது இந்த படம் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் கடலோர பகுதிகளை சார்ந்த இடங்களில் படமாக்கப்பட்டது.

வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தை தொடர்ந்து தேசிய விருது வாங்கி குவித்த வெற்றிமாறனுடன் கைகோர்த்து சூர்யா, வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இதற்கு முன்பாக வெற்றிமாறன் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர்களை  வைத்து விடுதலை என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அதை முடித்துவிட்டு சூர்யாவுடன் இணைவார் என தெரிய வருகிறது இந்தப் படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்கிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய கலைபுலி தாணு. வாடிவாசல் படத்தின் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கேஜிஎப், RRR  படங்களை போன்று..

தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமாக வாடி வாசல் திரைப்படம் இருக்கும் என கூறி உள்ளார். நிச்சயம் இந்த திரைப்படம் சூர்யா கேரியரில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.