விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எப்படி பட வாய்ப்புகளில் கிடைக்கிறதோ அதே அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடையும் பலருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்தவகையில் கோமாளியாக பங்கு பற்றி வரும் புகழ், பாலா, சிவாங்கி உட்பட இன்னும் பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்நிகழ்ச்சி ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சி காமெடியை மையமாக வைத்து ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைப்பதால் தான் இந்த ஷோ உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் குக்காக பங்கு பெற்று வரும் அஸ்வின், பவித்ரா உள்ளிட்டோருக்கு சினிமாவில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
அதோடு இவர்கள் செய்யும் புதிய ரெசிபிகளையும் பல நாடுகளில் உள்ள அனைவரும் செய்து பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி சீசன்2 முடியவுள்ள நிலையில் சீசன் 3 காண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குக்கா பங்குபெற்று வரும் ஒருவர் நடிகர் தனுஷுடன் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அது வேறு யாருமில்லை பாபா மாஸ்டர் தான். இவர் தான் தனுஷுடன் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார். இவர் தனுஷ் படங்களான படிக்காதவன், மாரி, கொடி, ஜகமே தந்திரம் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் தனுஷிற்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.