தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன், இவரை ரசிகர்கள் பலரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்றுதான் அழைப்பார்கள், சமீபகாலமாக அர்ஜுன் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இந்த நிலையில் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா அர்ஜுன் என்ற மகள் இருக்கிறார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் ‘பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து தன்னுடைய அப்பாவின் இயக்கத்திலேயே அடுத்த திரைப்படத்திலும் நடித்தார், இந்த திரைப்படம் பல மொழிகளில் ரிலீஸ் ஆனது அதேபோல் தமிழில் சொல்லிவிடவா என்ற தலைப்பில் ரிலீஸ் ஆனது.
இந்த திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா கதக் நடனம் கற்றுக்கொண்டார், மேலும் ஒரு பேட்டியில் மத்த டைரக்டர் படம் என்றாலும் பரவாயில்லை அப்பா டைரக்ஷன் அவர் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு நான் உயிர் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் திட்டு விழும் எனக் கூறினார், இவருக்கு சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாததால் இடையில் ஹிந்தி பட வாய்ப்பு வந்ததாகவும் அதனை இவர் மறுத்ததாகவும் பேட்டியில் கூறினார்.
மேலும் நல்ல படம், நல்ல திரைக்கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் இல்லையென்றால் வேற வேலையை பார்க்கலாம் என பேஷன் டிசைனிங் கத்துகிட்டேன் எனக் கூறியுள்ளார், மேலும் அவர் கூறியதாவது லண்டனில் பேஷன் டிசைனிங் கத்துக் கொண்டது மிகவும் நல்லதுதான் ஏனென்றால் என்னுடைய அப்பாவின் திரைப்படத்திலேயே காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்ய நேர்ந்தது.
மேலும் அவர் பேட்டியில் அப்பா என்பது வீட்டில் மட்டும்தான் சூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டால் குரு சிஷ்யன் உறவு தான், அவர் சொல்லிக் கொடுத்தபடி நல்ல பெயர் எடுக்க வேண்டும், நல்ல நடிகை என்று அனைவராலும் பாராட்ட வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது, இதைப்பார்த்த ரசிகர்கள் குட்டி தேவதையாக இருந்த ஐஸ்வர்யா அர்ஜுன் தான் இப்படி மடமடவென வளர்ந்த விட்டாரா என கூறிவருகிறார்கள்.