இயக்குனர் மணிரத்தினம் உண்மை மற்றும் நாவல் கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்குவதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் பல படங்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்துள்ளார் இருப்பினும் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பது அவரது கனவாக இருந்தது அதற்காக பல தடவை முயற்சி செய்து உள்ளார்.
ஆனால் அந்த கனவு மண்ணோடு மண்ணாக மறைந்தது இருந்தாலும் தனது முயற்சியை தவற விடாமல்.. தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார் ஒரு வழியாக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் அதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, லால், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படத்திலிருந்து இதுவரை வெளிவந்த அனைத்துமே வேற லெவலில் இருந்தது கடைசியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் போன்றவையும் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் தூக்கி வைத்துள்ளது.
இதனால் இந்த படத்தை பார்க்க பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் வந்தியத்தேவன் இந்த கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரம் இதில் முதலில் நடிக்க பல பிரபலங்கள் ஆசைப்பட்டுள்ளன.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரம் முதன்மையானதாக இருந்ததால் இந்த கதாபாத்திரத்தில் எம்ஜிஆர், கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய நான்கு வருமே நடிக்க ஆசைப்பட்டனர் ஆனால் அந்த வாய்ப்பு கடைசியாக நடிகர் கார்த்திக்கு போய் அமைந்துவிட்டதாம்.