ஜெயிலர் படத்தில் இந்த கதாபாத்திரம் ரொம்ப மொக்க.. ரசிகர்கள் கருத்து

jailer movie

Jailer movie : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெயிலர். படத்தில்  ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு என பல திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் ஷோ ஆனால் பெங்களூரு, சிங்கப்பூர் போன்ற மற்ற இடங்களில் அதிகாலையே ஓபன் ஆகி விட்டது படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் ஜெயிலர் படத்தில் காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது உலகளவில் 4000 திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது பலரும் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சிலர் படத்தில் இது எல்லாம் சரி இல்லை எனக் கூறி விமர்சனமும் கொடுத்து வருகின்றனர் அப்படி படத்தில் வில்லன் கதாபாத்திரம் சரியில்லை என ரசிகர்கள் கமெண்ட்  அடித்து வருகின்றனர். ஒரு ரசிகர் ஸ்கிரீன் ஸ்ப்லே ஸ்டோரி லாக், டார்க் காமெடி வொர்க் ஆகவில்லை, முதல் பாதி ஓகே, இரண்டாவது பாதி சுமார் என்பது போல கூறி உள்ளார்.

jailer twitter
jailer twitter

மற்றொருவர் இரண்டாவது பாதியில் என் பக்கத்தில் இருந்த இரண்டு பேரு வீட்டுக்கு போயிட்டாங்க அந்த அளவுக்கு மொக்க செகண்ட் ஹாஃப் என கூறி உள்ளார். மற்றொருவர் முன்னாடியே தெரிஞ்சிருச்சு  வசந்த ரவி தான் வில்லன் என்று.

பலரும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் வில்லனையும் ஜெயிலர் பட வில்லனையும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் போட்டுள்ளார் அதில் வசந்த ரவி தான் வில்லன் என்று பதிவிட்டு வடிவேலு வெளியில் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.