சினிமாவில் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் வெப் சீரியஸ்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முத்துக்குமார் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் வெப் சீரிஸ் தான் அயலி. இந்த சீரிஸ் இவ்வளவு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவம் என்பதனை எடுத்துரைக்கும் வகையில் அமைந்ததுள்ளது. எனவே தமிழில் வெளியான இந்த சீரியஸ்க்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த வெப் சீரிஸில் அபி நக்ஷத்ரா, அனுமொள், மதன், லிங்கா சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் மேலும் Estrella stories தயாரிப்பு நிறுவனம் சார்பாக குஷ்மவதி இந்த தொடரை தயாரித்துள்ளார். மேலும் இதனை அடுத்து திரைக்கதை மற்றும் வசனத்தை வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக் குமார் ஆகியவர்கள் இணைந்து எழுதி உள்ளார்கள்.
ரேவா இசையமைத்திருந்த நிலையில் இந்த தொடர் ஜி5 தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் வசனங்களும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது. முக்கியமாக முதன்மை கதாபாத்திரத்தில் அபி நக்ஷத்ராவின் தோழியாக நடித்துள்ள லவ்லின் சந்திரசேகர் நடிப்பு பெரியளவு பிரபலமாக உள்ளது.
லவ்லின் சந்திரசேகர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் அவருக்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்தான் விஜி சந்திரசேகரன்.
இவர் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவருடைய மகள் லவ்லின் தான் தற்பொழுது அயலி தொடரிலும் நடித்து அனைவரும் மத்தியில் பாராட்டுகளை பற்றி வருகிறார்.