தமிழ் சினிமா உலகில் உடன் நட்சத்திரமாக விளங்கும் தல அஜித். இவர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் வாலி இப்படத்தில் டபுள் ஆக்ஷன் ஆக அஜித் அவர்கள் வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.இப்படத்தை எஸ் ஜ சூர்யா இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அஜித்துடன் ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் முதலில் இப்படத்திற்கு ஜோதிகாவிற்கு பதிலாக கீர்த்தி ரெட்டி தான் நடிகை இருந்தார் அப்பொழுது அதற்கான அறிவிப்புகள் கூட அறிவிக்கப்பட்டது.
கீர்த்தி ரெட்டி அவர்கள் இதற்கு முன்பு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கில் சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இவர் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் தமிழில் நந்தினி ,ஜாலி ,இனியவளே போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் போனது இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பிறமொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை நடித்து பிஸியாக வலம் வந்தார்.
ஆனால் இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தால் இவரது இமேஜ் மிகப் பெரிய அளவில் சென்று இருக்கும் என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.