தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் மார்க்கெட்டின் உச்சத்திலிருந்து இருந்தாலும் இதற்கு முன்பாக பல்வேறு சிக்கல்களை திரையுலகில் சந்தித்தவர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் பல்வேறு இயக்குனர்களும் அவரை வைத்து படம் இயக்க முன் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சிம்பு இரண்டு காதல் தோல்வியை சந்தித்தவர் அவர் அந்த வகையில் இவை அனைத்தையும் மறந்துவிட்டு தற்போது சினிமாவில் அதிக அளவு கவனம் செலுத்தி வந்தது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாகியது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் பெருமளவு ரசிகர்களை கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம் இதில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருப்பார் இவர் மதுபான விளம்பரங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய உடை அணிவது போன்ற செயலில் ஈடுபட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் சமீபத்தில் நிதி அகர்வால் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை நீது அகர்வால் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சிம்புவின் தந்தையார் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருபவர் அந்த வகையில் தன்னுடைய இளைய மகன் குறளரசன் அவர்களுக்கு திருமணம் முடித்த நிலையில் தற்போது சிம்புவிற்கு பெங்களூரில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் நடக்க உள்ளதாகவும் இந்த திருமணம் நிச்சயத்திற்கு ரெடியாகிதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் சிம்பு மீது வந்த ரவுடியின் காரணமாக இந்த திருமணத்தை நிச்சயம் வேண்டாம் என பெண் வீட்டுக்காரர்கள் கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது இதனால் டி ராஜேந்திரன் குடும்பத்தார் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள்.