தனது இளம் வயதில் பல திரைப்படங்களை வேண்டாம் என்று கூறி அப்படி சில திரைப்படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர்களை பாடா பாடு படுத்தி வந்தவர் தான் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது வரையிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் புகழின் உச்சத்தில் இருந்ததால் தலைக்கனம் அதிகமாகிய நல்ல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டாராம் சொல்லும் நேரத்தில் நடித்துத் தர மாட்டாராம் எனவே தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் இயக்கவே பயந்து வந்தார்களாம்.
இப்படிப்பட்ட நிலையில் இவரின் மீது பல சர்ச்சைகளும் ஏற்பட்டதால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது எனவே கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் சிம்பு.
தற்போது தான் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது மகா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இவர் கோ திரைப்படத்தில் பாதி காட்சிகள் நடித்து விட்டு பிறகு விலகி விட்டார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.இந்நிலையில் ஏன் இவர் இத்திரைப்படத்தில் விளங்கினார் என்ற உண்மையான தகவல் 10 வருடங்கள் கழித்து தற்போது வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சிம்பு இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் பொழுது முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா,ஹன்சிகா போன்ற நடிகைகள் தான் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இத்திரைப்படத்தில் ராதாவின் மகளான கிருத்திகா அறிமுக நடிகையாக நடித்ததால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம் சிம்பு.