திருச்சிற்றம்பலம் படத்தில் “நித்யா மேனன்” நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகை தானாம் – வெளிவரும் தகவல்.!

dhanush

தமிழ் சினிமா உலகில் ரொம்ப அடிபட்டு பல அவமானங்களை சந்தித்து படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியை ருசித்தவர் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் அதற்கு காரணம் தொடர்ந்து இவரது படங்கள் வெற்றி பெறுகின்றன.

இப்பொழுது கூட இயக்குனர் மித்திரன் ஆர் ஜவகர் என்பவருடன் மீண்டும் ஒருமுறை நடிகர் தனுஷ் கைகோர்த்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார் இந்த படம் தற்பொழுது திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து  நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராசிக் கண்ணா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்த படம் சென்டிமென்ட், ரொமான்ஸ், காதல் என அனைத்தும் சூப்பராக இருந்ததால் ரசிகர்களும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக திருச்சிற்றம்பலம் படம் இருக்கிறது. தற்பொழுது வரை மட்டுமே இந்த திரைப்படம் 50  கோடி அள்ளி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சிற்றம்பலம் படம் வருகின்ற நாட்களிலும்  நல்ல வசூலை அள்ளும் என பெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க படக்குழு வேறு ஒருவரை தான் தேர்வு செய்ததாம். அந்த நடிகை வேறு யாரும் அல்ல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தானாம்.

nithya menon
nithya menon

அதே போல ராசி கண்ணா நடித்த கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்க இருந்தாராம். இவர்கள் இருவரும் நடிப்பது சற்று தள்ளி போகவே இவர்கள் இந்த படத்தில் விலகியதாக கூறப்படுகிறது அதன் பின் தான் இந்த கதாபாத்திரங்களில் நித்யா மேனன் மற்றும் ராசி கண்ணா நடிக்க வந்ததாக சொல்லப்படுகிறது.