சமீப காலங்களாக இணையதளம், தொலைக்காட்சி என்று அனைத்து சோஷியல் மீடியாக்களில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர் ஹரிநாடார் நடமாடும் நகை கடையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த இடத்துக்கு போனாலும் பல கிலோ கணக்கான நகைகள் அணிந்து கொண்டு போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
பொதுவாக பெண்கள் தான் போகுமிடமெல்லாம் அதிக நகைகளை அணிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் பெண்களையே ஓரம் கட்டும் அளவிற்கு நகைகளை வாரி போட்டுக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் தான் ஹரி நாடார்.
இவர் போட்டிருக்கும் நகைகளை பார்த்து எப்படி இவருக்கு இவ்வளவு நகைகள் கிடைக்கிறது என்பதை போலீசார் விசாரித்து வந்தார்கள். அந்த விசாரணையில் ஹரி நாடார் பல லோன்களை எடுத்துவிட்டு மோசடி செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது ஒருபுறமிருக்க சினிமாவில் இவரைப் பற்றிய பல சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.
இவ்வாறு பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர் அரசியலிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் சொந்த கட்சி ஒன்றை ஆரம்பித்து வெற்றி பெறும் நிலையில் இருந்து அதன் பிறகு தோல்வியை தழுவினார். பிரபல கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் அவருடன் மூன்று நடிகைகள் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தது. அந்த வகையில் பிக்பாஸ் வனிதா, தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீ ரெட்டி, விஜயலக்ஷ்மி இவர்கள் மூவரும் தான் இவருடன் தொடர்பில் உள்ளார்களாம் எனவே இவர்களை போலீசார் விரைவில் கூப்பிட்டு விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
தற்பொழுது ஹரி நாடார் ஜெயிலில் இருக்கும் நிலையில் இவர் அணிந்திருக்கும் நகைகள் யாரிடம் இருக்கிறது என்ற சந்தேகம் சில நாட்களாகவே இருந்து வந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பயில்வான் ரங்கநாதன் நடிகை விஜயலக்ஷ்மி இடம்தான் ஹரிநாடாரின் அனைத்து நகைகளும் இருப்பதாக கூறி உள்ளார்.