இந்த நடிகர் மட்டும் என்னுடன் சேர்ந்தால் போதும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் கொடுப்பேன்.? லோகேஷ் கனகராஜ்.

lokesh
lokesh

சினிமா உலகில் ஒவ்வொருவரும்   என்ன வருமோ அதை நோக்கிய பயணத்து வெற்றியை அள்ளுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து நோக்கி பயணிக்கிறார் இவரது படங்களும் சூப்பர் ஹிட் நடிக்கின்றன.

முதலில் மாநகரம்  என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதன்பின் லோகேஷ் கனகராஜ் டாப் நடிகர்களை வைத்து மட்டுமே படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் கார்த்தியை வைத்து கைதி, விஜய்யை வைத்து மாஸ்டர் இப்போ உலக நாயகன் கமலஹாசனுக்கு வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படமும் வெற்றி லிஸ்டில் சேர பார்க்கப்படுகிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. விக்ரம் படத்தில் ஒரு சண்டை காட்சி மட்டுமே ஒருமணி நேரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. விக்ரம் திரைப்படம் நாளை கோலாகலமாக உலக அளவில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர் படம் வெளிவருவதற்கு முன்பாக படக்குழுவும் நடிகர், நடிகைகளும் இந்த படத்தில் குறித்து பேசி வருகின்றனர் அப்படி அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் குறித்து சில தகவல்களை கூறி அசத்தினார் மேலும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது நடிகர் விஜய்யை வைத்து படங்களை இயக்குவீர்களா என கேட்டதற்கு தளபதி 67வது திரைப்படத்தை இயக்க உள்ளேன் அதனை தொடர்ந்து அவருடன் நான் எத்தனை தடவை வேண்டுமானாலும் இணைந்து படம் பண்ண ரெடியாக இருக்கிறேன் என கூறினார்.