மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் ஆரம்பத்தில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்தாலும் சொல்லும் அளவிற்கு அவரது பெயர் பிரபலம் அடையவில்லை இதனைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அந்த வகையில் இவருக்கு கைகொடுத்த திரைப்படம்தான் பிரேமம். இப்படம் திரையரங்கில் வெளிவந்து பல நாட்கள் ஓடியது அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது இப்படத்தின் மூலம் அவர் தமிழ், மலையாளம் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடையத் தொடங்கினார். இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் என்பவர் இயக்கியிருந்தார்.
பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் இப்படம் குறித்து தகவலை கூறி உள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் முதலில் இப்படத்திற்கே துல்கர் சல்மானை தான் நடிக்க பேசினார் ஆனால் நான் நிவின் பாலி தான் இப் படத்திற்கு செட் ஆவார் என உறுதியாக நின்று நடிக்க வைத்தேன் என கூறினார்.