விக்ரமுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.?

sethu
sethu

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா. பொதுவாக பாலா அவர்களுடைய திரைப்படங்கள் என்றாலே ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் அனைவரது மனதிலும் பதிந்துவிடும். அப்படி இவர் இயக்கத்தில் வெளியான பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், ஆகிய திரைப்படங்கள் இயக்குனர் பாலாவிற்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.

ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் துணை இயக்குனராக இருந்து வந்த பாலா தனியாக படங்களை இயக்குவதில் ஈடுபட்டார் அப்போது சேது படத்தின் கதையை வைத்துக்கொண்டு பல நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் பல நடிகர்களிடம் ஏறி இறங்கினார். ஆனால் இந்த படத்தில் யாரும் நடிக்க முன் வரவில்லை.

அதே நேரத்தில் சினிமாவில் ராசி இல்லாத நடிகராக வலம் வந்தார் விக்ரம். அப்போது விக்ரம் இருந்த நிலைமையில் படம் கிடைத்தால் போதும் என்று இருந்தார். அந்த சமயத்தில்தான் பாலா அவர்கள் சேது படத்தின் கதையை விக்ரமிடம் கூறியிருக்கிறார். விக்ரம் அவர்களுக்கு கதை பிடித்து போய் இந்த படத்தில் நடித்தார்.

அந்த படம் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் நடிகர் விக்ரம் அவர்களுக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால் சேது படத்தில் விக்ரம் நடிப்பதற்கு முன்பே ஒரு முன்னணி நடிகர் கமிட் ஆனார்.

ஆம் மறைந்த முன்னணி நடிகர் முரளி அவர்களிடம் பாலா அவர்கள் சேது படத்தின் கதையை கூறியவுடன் கதை மிகவும் பிடித்து போய் சேது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஆனால் அந்த நேரத்தில் சேது படத்தை தயாரிப்பாளர் தயாரிக்க முன்வராத காரணத்தாள் தயாரிப்பாளரை முதலில் கண்டுபிடிங்கள் என்று கூறிவிட்டாராம் முரளி. அதன் பிறகு தயாரிப்பாளரையும் பிடித்துக் கொண்ட பாலா மறுபடியும் முரளியிடம் சென்று இருக்கிறார்.

ஆனால் முரளி அவர்கள் அந்த சமயத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்ததால் சேது படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. சேது படம் வெளியான பிறகு முரளி அந்த படத்தில் நடிக்காமல் விட்டோமே என்று பலமுறை வருத்தப்பட்டது உண்டு.