நடிகர் சஞ்சீவ் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது ஏனெனில் இவரை தெரியாதவர் யாரும் கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு தன்னுடைய வேகமான பேச்சின் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் தடம் பதித்தார்.
இதனை தொடர்ந்து தமிழில் சந்திரலேகா, நிலவே வா, பத்ரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் துணை நடிகராக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து மீண்டும் தன்னுடைய நண்பன் தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நடிகர் சஞ்சீவ் திரைப்படத்தில் மட்டும் நடிப்பது மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் இவர் நடித்த மெட்டி ஒலி சீரியல் ஆனது மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த சீரியலின் மூலமாக சஞ்சீவை கொண்டாடினார்கள்.
இதனை தொடர்ந்து திருமதி செல்வம் என்ற சீரியலிலும் நடிகர் சஞ்சீவ் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் நடிகை வனிதா விற்கு சொந்தக்காரர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் அந்த வகையில் வனிதா சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் ஆனால் அதே திரைப்படத்தில் சஞ்சீவ் நடிகராக அறிமுகமானார்
ஆனால் இதற்கு முன்பாகவே சஞ்சீவ் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனசெல்வன் என்ற திரைப்படத்தில் தான் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் சஞ்சீவ் கவுண்டமணியின் மகனாக நடித்திருப்பார்.
அந்த வகையில் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லிய சஞ்சீவ் தான் விஜயகாந்த் உடன் நடித்த அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த புகைபடம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவுகிறது.