தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவர் பிரபல நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு சந்தோஷமும் கொண்டாட்டமும் நிறைந்த இவருடைய திருமண வாழ்வில் தற்சமயம் ஒரு விரிசல் ஏற்பட்டது போல விவாகரத்தில் வந்து முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இவர்களுடைய விவாகரத்திற்கு ஒரு நடிகர் தான் காரணம் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இவர்கள் இருவருமே கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம் அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா தன் கணவரை விவாகரத்து செய்துள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கான காரணம் தான் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவாகரத்து கூடிய விரைவில் நீதிமன்றத்திற்கு வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .
இந்நிலையில் அவர் கூறியது என்னவென்றால் நடிகர் ஒருவர் வெகுநாளாக நடிகையுடன் உறவில் இருந்ததன் காரணமாக பின்னர் விவாகரத்து நிபுணர் ஒருவரிடம் சென்று ஆலோசனை பெற்றதன் பிறகுதான் நாகசைதன்யா விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த விவாகரத்து நிபுனர் என்று அழைக்கப்படும் நடிகர் சமீபத்தில்தான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நண்பர்களாக இருந்து வருகிறார். அந்தவகையில் அந்த பிரபல நடிகரும் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இவர்கள் இருவரும் நெருங்கிய நட்புறவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நாக சைதன்யா அவரிடம்தான் ஆலோசனை பெற்று சமந்தாவை பிரிவதற்கு முடிவு செய்துள்ளதாக கங்கனா ரனாவத் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.