எனது உடம்பு பிட்னஸ்ஸாக இருக்க காரணமே இந்த நடிகர் தான் – ஒருவழியாக ரசிகர்களிடம் ரகசியத்தை சொன்ன நடிகை சமந்தா.

samanatha-
samanatha-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. குறைந்த படங்களில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். காரணம் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பரான படங்களாக மாறி ஒருகட்டத்தில் டாப் நடிகர்களுடன் இணைந்து திறமையையும் கிளாமரும் அழகாக காட்டி நடித்ததால் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தன.

அந்தவகையில் தெலுங்கிலும் சிறப்பாக நடித்தார். ஒரு கட்டத்தில் மாறி மாறி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்தார். மேலும் வெப் சீரிஸ்களுக்கும் தலை காட்டியதால் தற்பொழுது ஹிந்தி வரை இவரது பெயர் பரவி உள்ளது. இதனால் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக நடிகை சமந்தா வலம் வருகிறார். மேலும் அதற்கேற்றார் போலவே இவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அந்த ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் நடிகை சமந்தாவை அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களுடன் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அண்மைகாலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனைத்தும் வேற லெவெலில் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர் ஒருவர் உடன் சமீபத்தில் பேசி உள்ளார். அப்போது அந்த ரசிகர் பிட்னஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர என்ன காரணம் என கேட்டுள்ளார். அதற்கு நடிகை சமந்தா உங்களுக்கு ஒரு பெரிய ரகசியத்தை சொல்லுகிறேன்.

நான் ஜிம்முக்கு போக ஆரம்பித்ததே நடிகர் நாக சைதன்யா பார்ப்பதற்காக தான். சைதன்யா எப்பொழுதும் ஜிம்மிற்கு செல்வார் அதனால் நானும் ஜிம்மில் இணைந்தேன் என தனது முன்னாள் கணவர் குறித்து அதிரடியாக பேசி உள்ளார் நடிகை சமந்தா.