தமிழ் சினிமாவில் இந்த நடிகர் மட்டும் தான் எந்த ஒரு நடிகை உடனும் கிசுகிசுவில் ஈடுபட்டதே கிடையாதாம்.? அடிச்சி சொல்லும் பயில்வான் ரங்கநாதன்.

paiyilvan-ranganathan
paiyilvan-ranganathan

இவ்வுலகில் வெற்றி கண்ட பிரபலங்கள் பலரையும் நாம் அறிந்திருக்க மாட்டோம் ஆனால் சமீப காலமாக நடிகரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் நடிகைகள் என்ன செய்கிறார்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பது குறித்து எல்லாம் புட்டுப்புட்டு யூடியூப் சேனல் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. பலரையும் பல்வேறு விதமாக கூறும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு டாப்பிக்கை எடுத்து உள்ளனர் எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசு படாத ஒரே நடிகர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு யோசித்து வெளிப்படையாக ஒருவரை மட்டுமே பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டு சொன்னார். 90 காலகட்டங்களில் சினிமாவில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் ஆனந்தராஜ்.

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தாலும் காலம் போகப்போக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் ஒருகட்டத்தில் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு காமெடி கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் அவரை நம்பி வில்லன் கேரக்டர் கொடுக்கப்பட்டாலும் அதிலும் திறம்பட நடித்து வருகிறார் இதனால் தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறார் ஆனந்தராஜ்.

பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பல பெண்களை கொஞ்ச செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும் ஆனால் உண்மையில் ஆனந்தராஜ் திரைத்துறையில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அதற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். எந்த ஒரு நடிகையுடனும் அவர் கிசுகிசுக்களில் ஈடுபட்டதும் கிடையாது எளிமையாக பழகக்கூடியவர்.

மேலும் ஆனந்தராஜ் அவ்வளவு எளிதில் யார்கூடவும் நெருக்கமாக பழகுவது இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறினார் மேலும் அனைவரிடமும் சகஜமாக பழகுவார் என்று சொல்லி உள்ளார் எனக்கு தெரிந்து சினிமாவில் நல்ல மனிதர் என்றால் அது ஆனந்தராஜ் என பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இச்செய்தி சமூகவலைத்தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

ananda raj
ananda raj