இந்த நடிகர்னா ஓகே, ஆனாள் அந்த நடிகரோட நடிக்க மாட்டேன்.! பிரபல இளம் நடிகை அதிரடி முடிவு…

actress
actress

ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி இவர் தயாரிப்பாளர் போணி கபூரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போது அவருடைய மகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தனர் ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அடுத்த ஆண்டு சினிமாவில் நுழைந்து விட்டார்.

அந்த வகையில் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர். இந்த படம் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெறவே அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர் இதனை தொடர்ந்து தற்போது என்டிஆர் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் இதை தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமானபோது இவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பிரபல நடிகர் ஒற்றைக்காலில் நின்று இருக்கிறார். அவர்தான் நடிகர் தனுஷ் இவர் தன்னுடைய படத்திற்காக நடிகை ஜான்வி கபூரை சிபாரிசு செய்து இருக்கிறார் ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் என்னுடைய மகள் தமிழில் அறிமுகமாக மாட்டார் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியில் எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும் அது மட்டுமல்லாமல் அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனக்கு மிகப்பெரிய கனவு அப்படி அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று கூறி இருக்கிறாராம்.