அஜித் நடித்த மங்காத்தா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவரது சிறந்த நடிப்பு மற்றும் நிஜ வாழ்க்கையின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர். இவர் படத்தில் நடிக்க பல நடிகர் நடிகைகள்  காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில நடிகர் நடிகைகள் இவர் படத்தில் நடித்து மேலும் பிரபலம் அடைந்து உள்ளனர்.அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா இப்படத்தை வெங்கட்பிரபு அவர்கள் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜீத்துடன் சேர்ந்து பல நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர் குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுன், ஆண்ட்ரியா, வைபவ், அஞ்சலி, மகத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அஜித் அவர்கள் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் மேலும் வளர தொடங்கினார். படத்தில் நடித்த மற்ற இளம் நடிகர்கள் நடிகைகளும் தற்போது பிரபலமடைந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

தற்பொழுது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜீத் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மற்றும் ஹீரோயினாக ஹுமா குரேஷி அவர்களும் போலீசாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த மங்காத்தா போல இருக்கும் என இயக்குனர் எச் வினோத் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது இந்த சூழலில் மங்காத்தா படம் குறித்து நடிகர் ஜெய் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியது.

மங்காத்தா படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என கேட்டிருந்தேன் ஆனால் இப்படத்தில் அஜித் சார் அவர்கள் ஒப்பந்தம் ஆனார் ஆனால் அதற்கு முன்பாகவே 5 ஹீரோக்களில் ஒருவனாக இருந்தேன் நான்கு ஹீரோக்கள்  ரெடியாக இருக்கிறார்கள் என சொன்னார்கள் அப்புறம்தான் ஐந்தாவதாக அஜித் சார் இருந்தார் அவருடைய கதாபாத்திரம் தான் நான் நடிக்க இருந்தேன் என பரபரப்பு பேட்டி ஒன்றை தற்பொழுது கூறி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.