மீண்டும் புதிய கதையுடன் சீரியலில் இறங்கும் திருமுருகன்..! சந்தோஷத்தில் சன் டிவி ரசிகர்கள்..!

thirumurugan
thirumurugan

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே நல்ல கதையம்சம் உள்ள சீரியலாக இருப்பதற்கு காரணமாக எளிதில் சன் டிவி டிஆர்பி யில் முன்னிலை வகிக்க உதவியாக இருக்கிறது.

அந்தவகையில் ஒரு நேரத்தில் சன் டிவியை விடாமல் முதலிடத்தில் வைத்திருந்த ஒரு இயக்குனர்தான் திருமுருகன் இவர் சன் டிவி தொலைக்காட்சியில் மெட்டிஒலி நாதஸ்வரம் கல்யாண வீடு குலதெய்வம் போன்ற பல்வேறு சீரியல்களை இயக்கி ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளை எளிதில் கவர்ந்து விட்டார்.

சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் வெகு நாட்களாக எந்த ஒரு சீரியலிலும் தென்படாத திருமுருகன் சமீபத்தில் ஒரு புதிய கதையுடன் சன் டிவி தொலைக்காட்சியை மீண்டும் நாடி வந்துள்ளார் அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒரு புதிய சீரியலும் உருவாக உள்ளது.

இந்நிலையில் அந்த சீரியல்கான முதல்கட்ட பணிகள் அனைத்துமே முடிவடைந்த நிலையில் தற்போது நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளார்களாம் அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடிப்பதற்காக விளம்பரம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு பிரபலங்களும் இந்த சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

மிக விரைவில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்ப்பதற்கு ரசிகர்கள் இளைஞர்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். மேலும் இந்த சீரியல் வெளிவந்து விட்டால் கண்டிப்பாக எந்த ஒரு சேனலும் சன் டிவி டி ஆர் பியில் போட்டி போட முடியாது என்பது உண்மை.