எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆப்பு வைக்க வரும் சூப்பர் ஹிட் சீரியல்.. சிசியனை மிஞ்சுவாரா குரு.?

selvam serial
selvam serial

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் டிஆர்பி-யிலும் முன்னணி வகித்து வருகிறது. இவ்வாறு எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பியை ஓவர் டேக் செய்வதற்காக சன் டிவியே புதிய சீரியல் ஒன்றை களம் இறக்க உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடைய கேரக்டர் குறித்து புரியாத புதிராக இருந்து வந்த நிலையில் தற்போது தான் ஒவ்வொரு முடிச்சுகளாக அவுர தொடங்கியுள்ளது.

அந்த வகையில் அப்பத்தாவின் 40% சொத்தை குணசேகரன் ஆட்டையை போட்டு விட வேண்டும் என நினைத்த நிலையில் ஆப்பு வைத்து ஜீவானந்தம் அப்பத்தாவின் சொத்தை தனது பெயரில் மாற்றிக் கொண்டார் இது தெரிந்தவுடன் குணசேகரன் ஆடிப் போக குடும்பத்தினர்களும் உச்சகட்ட பயத்திலிருந்து வருகின்றனர்.

மேலும் ஜீவானந்தத்தை குணசேகரன் எழுத்து பேசியதால் அவருடைய ஆட்கள் குணசேகரனை அடித்து நொறுக்கினர். இவ்வாறு மொத்த மானமும் போய் இருக்கும் நிலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே குணசேகரனுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஜீவானந்தத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

இவ்வாறு சுவாரசியமான கதைகளைத்துடன் ஓடி கொண்டிருக்கும் நிலையில்தொடர்ந்த டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.  எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பியை உடைப்பதற்காக சன் டிவியில் மேலும் ஒரு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது அதாவது செல்வம் என்ற சீரியல் தான் அறிமுகமாக உள்ளது.

செல்வம் சீரியலை மெட்டி ஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன் அவர்கள் தான் இயக்க இருக்கிறார். இவர் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் அவர்களுக்கு குரு என கூறலாம் இப்படி சிசியனை குரு மிஞ்சுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.