விஜய்யின் திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரின் மனைவி தான்.! யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 10 வயதில் ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானார் நடிகர் விஜய். அதன்பிறகு வசந்த ராகம், இது எங்கள் நீதி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன் என்ற திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் வழியாக செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தளபதி விஜய்  கடைசியாக நடித்த பிஸ்ட் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றுத்தந்தது. இதே போல் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் திருமலை. அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருப்பார்.

இந்த திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு முன்னாடி தெலுங்கில் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா இத் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அவருக்கு கால்ஷிட் பிரச்சனை இருந்ததால் அவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போக்கிவிட்டது இந்த தகவல்  சமூக வலைத்தளத்தில் பேசபட்டு வருகிறது.

maheshbabu wife
maheshbabu wife