தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தற்பொழுது பாலிவுட்,ஹோலிவுட் என உலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், அந்தரங்கீரே, மாறன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி தோல்வியை சந்தித்தது. மேலும் அந்த திரைப்படங்கள் சில பிரச்சினை நான் ஓடிடியில் வெளியான காரணத்தினால் தனுஷின் ரசிகர்கள் இவரை திரையில் பார்க்க முடியாமல் ஏங்கி வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த தனுஷ் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் வெற்றி திரைப்படம் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள் இவ்வாறு தொடர்ந்து மூன்று நான்கு திரைப்படங்கள் தோல்வி அடைந்த காரணத்தினால் தனுஷ் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். மேலும் நல்ல கதை உள்ள திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார்.
இதன் காரணமாக இதற்கு மேல் தன்னுடைய படங்கள் தோல்விடையாது என நம்பிக்கை வைத்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன்,இதனைத் தொடர்ந்து வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இயக்குனர் மித்திரன் ஜெகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றபலம்.
இப்படத்தின் மூலம் தனுஷ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு வந்துள்ளார் வருகிறார். பல வருடங்கள் கழித்து தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே ஒருவன் திரைப்படம் உருவாகி வருவதாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகி திரைப்படங்களை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தான் இயக்கி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் மற்றும் மித்திரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உருவானது இந்த திரைப்படத்தில் இவர்களை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இவர்களைத் தொடர்ந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன்,ப்ரியா பவானி சங்கர், ராசிக் கண்ணா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பல மாதங்களாக இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் தற்பொழுது அதிகாலை காட்சி இல்லை என்றாலும் காலை காட்சியை மிகவும் கோலகாலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு முதல் நாளே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் தனுஷை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளதாக ரசிகர்களின் கவனத்தில் தெரியவந்துள்ளது இவ்வாறு இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 23 கோடி வரை வசூல் செய்தது,இதனை தவிர உலகம் முழுவதும் இப்படம் இதுவரை 32 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.