எதிர்நீச்சல் சீரியல் இயக்குவதை நிறுத்த சொன்ன ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.! திகைத்துப் போன இயக்குனர்

thiruselvam
thiruselvam

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஏராளமான ட்டுவிஸ்ட்களுடன் எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீப பேட்டியில் திருச்செல்வம் நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் பேசிய சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அப்பொழுது ரஜினிகாந்த் இந்த சீரியல் இயக்குவதை நிறுத்தி விடுங்கள் என கூறினாராம்.

மேலும் அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இந்நிலையில் பேட்டியில் திருச்செல்வம் பல தகவல்களை பகிர்ந்து உள்ளார். அப்படி அவர் கூறுகையில், இதற்கு முன்பு கோலங்கள் சீரியல் இயக்கியிருந்தேன் அது எல்லாருக்கும் தெரிந்ததுதான் அதுபோல எனக்கு நடிகர் ரஜினிகாந்த் என்றால் அவ்வளவு பிடிக்கும் நான் அவருடைய தீவிரமான ரசிகர். இந்த நிலையில் கோலங்கள் சீரியல் முடிந்த சில நாட்களாகி இருந்தது அப்பொழுது கோலங்கள் சீரியலில் நடித்த நடராஜன் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சீரியல் குறித்து பேசி இருக்கிறார்.

அப்பொழுது ரஜினிகாந்த் நான் கோலங்கள் சீரியல் பார்ப்பேன் வீட்டில் தொடர்ச்சியாக பார்ப்பாங்க நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்த சீரியல் பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இதனை என்னிடம் நடராஜன் சொன்ன பொழுது நான் சந்தோஷத்தில் திகைத்து இருந்தேன், பிறகு நான் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதை சொன்னதை அவர் ரஜினியிடம் சொல்லி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து எனக்கும் ரஜினிகாந்தை மீட் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு அறையில் நான் ரஜினிகாந்துக்காக காத்திருந்தேன் ஆரம்பத்தில் அங்கே போகும் பொழுது கூட ரொம்ப கூட்டமாக இருக்கும் நம்ப அவர்கிட்ட என்ன பேச போறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு போன பிறகு தான் நான் மட்டும் தான் அங்கே இருக்கிறேன் என்று தெரிந்தது.

பிறகு ரஜினிகாந்த் என்னிடம் சாதாரணமாக பேசினார் எனக்கு அது வியப்பாக இருந்தது. அதன் பிறகு எப்படி ஒரு டைரக்டர் 1500க்கு மேற்பட்ட எபிசோடை எடுத்து இருக்கீங்க உங்க சீரியல் நானும் பார்க்கிறேன் என்று ரஜினி சார் சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. மேலும் நிறைய பேசிக் கொண்டிருந்தோம் அப்பொழுது இனி நீங்கள் சீரியல் இயக்குவதை விட்டுவிடுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இருக்கும் திறமையை வைத்து திரைப்படம் டைரக்ட் பண்ணுங்க என்று கூறியுள்ளார். இவ்வாறு ரஜினிகாந்த் கூறிய இன்னும் ஏராளமான தகவல்களை திருச்செல்வம் பகிர்ந்திருக்கிறார்.