1981ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி திரைப்படம் தில்லு முல்லு இந்த திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் ரஜினிகாந்த் சவுகார் ஜானகி, மாதவி, விசு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
படத்திற்கு விஸ்வநாதன் தான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் ரஜினியின் திரைப்பயணத்தில் மிக முக்கியத் திரை படமாகவும் அமைந்தது.
இந்த திரைப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் தன்னுடைய முதலாளிக்கு தெரியாத அளவிற்கு இந்திரன் சந்திரன் என இரண்டு கதாபாத்திரத்தில் செய்யும் சேட்டைகள் அனைத்தும் பெருமளவு ரசிக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொள்ள இவர் செய்யும் பித்தலாட்டங்கள் அனைத்தும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார் அதேபோல் ரஜினிகாந்திற்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்தது அதற்கு ஈடாக மற்றொரு கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்பட்டது அதுதான் ரஜினிக்கு முதலாளியாக நடித்த தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரம்தான்.
தேங்காய் சீனிவாசன் நடிப்பிற்கு ஒரு காலத்தில் சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருந்தார்கள் அந்த அளவு அவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது அதிலும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு காமெடியாக பேசுவதில் வல்லவர். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையில் 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறந்த 25 நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டது அதில் தேங்காய் சீனிவாசன் இடம் பெற்றிருந்தார்.
அதற்கு காரணம் தில்லு முல்லு படத்தில் இவரின் கதாபாத்திரம் தான். தில்லு முல்லு திரைப்படம் வெளியான காலத்தில் பொதுமக்கள் பலரும் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோ எனக் கூறினார்கள்.