சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்துறையில் புகார் அளித்திருக்கும் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சினிமாவில் கொண்டு வராத ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு வேலைகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அதில் தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் ஆகியவை மாயமாய் உள்ளதாக அவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்திருக்கும் நிலையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.