சினிமா ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தளபதி விஜய் சினிமாவில் உழைத்துக் கொண்டே வருகிறார் அதற்கான பலனை அவர் அனுபவிக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதால் அவரை ரசிகர்கள் உச்சத்தில் தூக்கி வைத்து அழகு பார்க்கின்றனர்.
மேலும் அவர் நடிப்பில் வரயுள்ள படங்களுக்கு இப்பொழுதே கொண்டாடவும் ஆரம்பிப்பதால் நடிகர் விஜயும் உற்சாகத்துடன் படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலிப்குமாருடன் இணைந்து 65 – வது படத்தின் ஷூட்டிங்கில் பணியாற்றி வருகிறார்.
தற்பொழுது நிலவும் சூழல் சரியில்லாததால் படக்குழு தற்காலிகமாக சூட்டிங்கை நிறுத்தி உள்ளது இந்த நிலையில் விஜய் படத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் தலைவா. இந்தப் படத்தில் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்தநிலையில் ஏஎல் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் தலைவா படத்தை பற்றிய சூப்பரான செய்தி ஒன்றை கூறி உள்ளார்.
அதாவது முதன் முதலில் தலைவா படத்திற்கு தலைப்பு “தளபதி” என்று தான் வைக்கப்பட இருந்தது ஆனால் ஏஎல் விஜய் அவர்களோ மணிரத்னத்தை அப்பொழுது சந்தித்து பேசிய போது சில அறிவுரைகளை கூறியிருந்தாராம் அதன்பிறகு சில காரணகளால் இப்படத்திற்கு தலைவா என பெயர் மாற்றப்பட்டு படம் வெளியானது என கூறினார்.