தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி என்ற அந்தஸ்தை பெற்று ஓடிக் கொண்டு இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். தற்போது பொன்னின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார் முதல் பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது ஒரு நல்ல வசூலையும் ஈட்டியது இந்த படத்தில் இருந்து தற்போது ஒரு சூப்பரான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது
இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். ஒருவருக்கும் மிக அற்புதமான கதாபாத்திரம் இருந்ததால் அனைவரும் ரசிக்கும்படி அமைந்தது.
இந்த படத்தில் முதன் முதலில் அருண் விஜய் மற்றும் சிம்பு கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர்கள்தான் நடிகை இருந்ததாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சிம்பு கதாபாத்திரம் மற்றும் அருண்விஜய் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் ஆகியவர்கள் தான் நடிக்க இருந்தனராம்.
ஆனால் அவர்கள் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதற்கு பிறகு இவர்களை கமிட் செய்தனராம். இச்செய்தி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.